நிருவனர்: ஆ.மாணிக்கம். [நிர்வாகம் பொறுப்பு: மா.குணசேகரன்]

நிருவனர்-செல்லம்[பேரமகள்]:                                                                                                                                                                       Anitha Jayaseelan Pharmacist [15 மே, 2022]


அறிமுகம்: 

 
    Associate Professor, PERI Education
    Madras College of Pharmacy நிறுவனத்தில் Assistant Professor in Pharmacy Department ஆகப் பணியாற்றியவர்
    பள்ளிக்கல்வி: JKKMMRF College of Pharmacy
    பள்ளிக்கல்வி: Jaya College of Pharmacy & Paramedical Sciences
    வசிக்கும் ஊர்: சென்னை, இந்தியா

ஈன்ற பொழுது(இ)னினும் தன்மகனை 
சான்றோன் என கேட்ட தாய்!
வாழ்துக்கள் -- 
முப்பாட்டன்  திருவள்ளுவர் ஞானம்!

தமிழ்சோலை ஊடே தவழ்கவிதை சிட்டே!
அமிழ்தம் அருந்துப்பின் ஆகாயம்
சென்று;
குமுதம் எனசிரிக்கும் கொவ்வை
நிலாவில்...
அமைதி கொடிநாட்டி வா!

பொங்கலிடு திங்களிது புத்தாண்டில்
வாழ்த்துகிறோம்!
சென்றுலகு சுற்றிவந்(து) எங்களிடம்
பொங்கல்...
எத்தனைபேர் வீடுகளில் பொங்கு
தென்றே சொல்ல;
சிட்டே சிறகு விரி!

பற்றிஎரி யும்வயிற்றை பாச-
முடன்தடவி,
சட்டினியை தொட்டுச் சாதமென
கூழ்களியை...
பிட்டுண்டே நாளும் பிழைப்போர்
விடியலுக்கு;
சிட்டே சிறகு விரி!

சாதி மதவகுப்பு சண்டைஒழி நாட்டு-
மக்கள்
நீதிபெற நீஉயரு நீசமதம் பேதம்கொய்
புத்தாண்டில் வாழ்த்துகிறோம்; பொங்கல் இனிப்போடு...
சிட்டே சிறகுவிரி செல்!

எட்டுத் திசைசென்றே எட்டாத செய்திகளை;
கட்டுக் கதையின்றி கற்பனையும்
சேராது...
கட்டுரையாய் கண்டெடுத்துக் கொண்டு வரகவிதை...
சிட்டே சிறகு விரி!

தொட்டு(கரம்) தாலிகட்டி தூயவளை
விட்டு-வர...
தட்சணையே மஞ்சமென புதிகெட்டு
வாழ்பவனை...
கட்டி இழுத்துவந்து காலில் விழசெய்ய
சிட்டே சிறகு விரி!

கொட்டும் பனிமலையை விட்டும்
சமவெளியை...
தொட்டும் துவள்கடலில் சங்கமிக்கும்
கங்கையினை...
வெட்டிகால் வாய்வழியே காவிரிக்கும்
கொண்டுவர...
சிட்டே சிறகு விரி!

சீராடி வாதாடி திண்டாடி சங்கங்கள்
போராடி பெற்றதேஇப் போனஸ்
எனவுணர்ந்த;
வாயாடி சிட்டேநீ போராளி சங்கத்-
திற்கு...
போயோடி வாழ்த்துத் தெரிவி!


உகர உயிர்மெய் எழுத்தொடு நுகரஓர்...  உயிரெழுத்து;
பகரப் படுவது(ம்) உயிர்மெய் எழுத்தே!  அவ்விடமே... 
நிகழஉறவு நம்பிள்ளைக்கு முதல்எழுத்... தாய் நிலைப்பதும்,        
புகழப்படுவதும்; நின்பெயரே... என்று; 
புன்னகைத்து நாணும்... அன்னைப்போல், 
செம்மொழியால் யார்... கவிஞர் ஆனாலும்... 
விம்ம நெஞ்சம்முன் மொழிவதெது?  
விண்வரு டும்தாய் தமிழே! 

பின்னிரவில் கண்விழித்துப் பேணி சுறு சுறுப்பை (மணி)
பன்னி... ரெண்டும் தாண்டி பகல்மூன்றில் ஓயும்நம்... 
பெண்ணேபோல்  விண்ணில்,பிறைநிலவும் தேய்கிற(து)ஏன்? 
என்போல் தமிழ்சுவைக்கும் ஏக்கம்! 

அழகாய் சிரிக்கும் அனைத்தும் உறங்க, 
விழியேன் என்றே விடியல் குளிராய், 
இளமை அணையேன்; எழேன்நான் தமிழாய், 
விழிவழி பேசு விழிப்பேன்! 

உலாவும் உலகும் உருளும் கதிரோன், 
நிலாவும் உறையும் நெழிமுகில் வானும், 
துளாவி மயங்கும் சுவைஎஃதாம்? வாழை, 
பழமாவும் பாடும் தமிழே! 

மலரும் கொடியும் மணமும் முயங்க, 
நிலவும் ஒளிர நிலமும் குளிர, 
களத்துள் முனகிடும் காதலர் அன்ன, 
குலவும் குயில்கள் குரலும் தமிழே! 

சிரிக்கும் இயற்கை திறக்கும் மொழியும், 
தெரிக்கத் தமிழை; தினமும் மதுவை
சுரக்கும் மலர்மேல் சுழல இசையை, 
விரிக்கும் அரியும்... வியக்கும்! 

கமழும் மணத்தை கனியும் வனங்கள், 
உமிழும் மலராய் உதிர்க்கும் கொடிமேல், 
அமிழ்தைப் பருக அமரும்பொன் வண்டும், 
தமிழ்தான் இளமையென தாவும்! 

எடுக்கத்தேன் பூமேல் ஏறும்வண்(டு) அங்கே 
அடுக்கும் இசையும் அதனால் அசைந்துக் 
கொடுத்து மகிழும்பூ கொட்டும் சுவையும் 
துடுக்கும் தமிழுக்கே சொந்தம்! 

கமழும் மணத்தைக் கனியும் வனங்கள் 
உமிழும் சுகத்தை உணர்ந்த மலர்கள் 
அமிழ்தைப் பருக அமரும் அரியும், 
தமிழ்தான் சுவைஎனத் தாவும்! 

எதுவோ ஆதாரம்? தமிழே! 

வெல்லத் தமிழொடு விந்தொடு கற்பனை... 
துள்ளக் கருவெடு சொல்லுள் இறுக்கிஉன்... 
கல்வி முனைமீது காயம் சுழலநீ... 
சொல்,சொல்; கவிதைச் சுரக்கும்! 

உயிரும் உறவும் உடலும் உடையும்
வயி(ற்)றை நிரவும் வயலும் மணியும்
அணுவும் துணையும் அசைவும் இசையும்
தினம்என்வாய் தீண்டும் தமிழே!

பனிப்பட அசையும் பாசக் கொடியாய்
தனிமையில் காற்றொடு தலையசை வயலாய்
கனவுக்குள் நிலைத்த கனிகை நினைவாய்
எனக்குள் இனிப்பது எப்போதும் தமிழே!

அவளின் முகமா? அசையும் இதழா? 
உவகை நிலவா? உதிர்க்கும் ஒளியா? 
தவழும் முகிலா? தளிர்மின்னற் பாய்வா? 
எதுவாம் எழிலோ? தமிழே! 

தயிரோவெண் ணெய்க்கு,வான் தண்ணீர் 
வயலுக்கு;
உயிரோ இணையும் உடற்கு - 
மயிலே! 
எயிரைக்காண் பல்போல் இசைக்கும் 
தமிழ்தான்...
குயிலுக்(கு), ஒயிலுக்(கு)ஆ தாரம்!

வான் தட்டும் மழைஉண்டு வனங்கள் உயரும்;
மீன்முட்டும் அலைதொட்டு நதிகள் நகரும்;
காணேட்டு திசைசென்றேன் கவிதை சுழலும்; (நான்)

தேன்சொட்டும் தமிழுண்டு தினமும் வளர்ந்தேன்! 



Vck Thirumozhi என்பவரது பதிவு



உலக மக்கள் நலம்பற்றி அமைந்துற்ற
கட்டுரை:

முன்னுரை:

இந்நாள் தலைமுறையினரின் எதிர் கால வாரிசுகள் துன்பமோ துயரமோ இன்றி மேன்மையுற வேண்டும் என்கின்ற அடிப்படையில் பின்வரும் கட்டுரையானது அமைகின்றது. 
இக் கருத்துக் கருவூலம் இந்தியா 
என் கின்ற தனிப்பெரும் நாடு மட்டு மன்றி முன்னேறாத பிறஉலக நாடு களும் பயனுற வேண்டும் என்கின்ற அவா மற்றும் ஆதங்கம் பேரிலும் உரு ஆகின்றது! இக்கரு மழலையாவதும் நிராகரிக்கப்படுவதும் அந்தந்த நாட்டு அரசுகளின் விருப்பம் மற்றும் மக்க ளின் மனோபாவம் சார்ந்தது!


கட்டுரை:
 
            2) மானுடம் வாழும் பூமிப் பரப் புக்குள் என்ன நடைமுறைக ளெல்லாம் ஒழிக்கப்பட வேண்டும் என்று எண்ணு கிறீர்களோ அவற்றை யெல்லாம் பட்டியலிடுங்கள். அவ்வா றான பட்டிய லுக்குள் அநேகமாக இலஞ்சமும் ஊழல்களும் (கையூட்டுக்கள் பெறுவ தும், தருவதும்) என்பதானது முதலா வதாக இடம்பெறக் கூடும். அந்தப் படிக்கு பட்டியலுக்குள் இடம் பெற்றி டும் அனைத்தும், அடுத்துவரும் பத்தி யில் தெரிவித்திட்டபடி தகவல்கள் நடைமுறையில் அமுலுக்கு வரும் நாளிலிருந்து மூன்று ஆண்டுகட்குள் யாவும் களையப்பட்டுவிடும் என்ப தானது ஒட்டுமொத்த மக்களின் நலம் மற்றும் ஒற்றுமையை ஏற்படுத்துதல் என்கின்ற அடிப்படையில் முறையே ஆய்வுச் செய்கையில் உறுதிப்படும்.

Go & read further: Willswords M Kavithai chittu: ஒற்றுமை வளம் உலக நலம்!: https://willsindiaswillsword.blogspot.com/2012/11/blog-post_24.html

https://willswordsm.wordpress.com/

பெண்மை(யை) போற்றுவோம்! முன்னேறுவோம்!

Comments